"பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" - பிரதமர் உறுதி

இரவு நேர பணியில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் - பிரதமர் உறுதி
x
இரவு நேர பணியில் இருக்கும்  பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற அவர், சிறப்பு தபால் தலையை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, பெண்களின் பாதுகாப்புக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஏழை - எளிய மக்களுக்காகவும், ஓடுக்கப்பட்ட மக்களுக்காகவும், கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், ஒரு சாதனை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்