பற்றாக்குறையிலேயே நீடிக்கும் நாட்டின் நடப்பு கணக்கு

ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நிலையிலேயே நீடிக்கிறது.
பற்றாக்குறையிலேயே நீடிக்கும் நாட்டின் நடப்பு கணக்கு
x
* உலக நாடுகளுடனான நாட்டின் வர்த்தகம், முதலீடுகள் அன்னிய செலாவணியில் தான் பொதுவாக நடக்கிறது. இது நடப்பு கணக்கு, மூலதன கணக்கு
என்று இரண்டு வகைபடுகிறது. 

* சரக்கு, சேவை, இதர வகை பரிவர்த்தனைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாகுறை அல்லது உபரி வகைப்படுத்தப்படுகிறது.

* ஏற்றுமதி செய்வதை விட அதிக அளவில் இந்தியா இறக்குமதி செய்வதால், நாட்டின் நடப்பு கணக்கு எப்போதும் பற்றாகுறை கணக்காகவே தொடர்கிறது.

* 2017-18 நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 43.21 லட்சம் கோடி ரூபாயாகவும்,மொத்த இறக்குமதி 46.79 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. நடப்பு கணக்கில் 3 புள்ளி 57 லட்சம் கோடி ரூபாய் நிகர பற்றாகுறையாக உள்ளது.

* அன்னிய நிதி மூலதன வரவுகள் மற்றும் செலவுகள் முதலீட்டு கணக்கில் கணக்கிடப்படுகிறது. இந்திய பங்கு மற்றும் கடன் பத்திரச் சந்தைகளில், அந்நிய முதலீடுகள் மிக அதிகம் நுழைவதால், இந்த கணக்கில் நிகரமாக உபரி ஏற்படுகிறது. 

* 2017-18 நிதியாண்டில் 3 புள்ளி 50 லட்சம் கோடி ரூபாய் உபரி வருவாய் கிடைத்ததால், நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாகுறையை சமாளிக்க முடிந்துள்ளது.

* 1991 ஆம் ஆண்டு வரை இந்திய பங்கு சந்தையில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படவில்லை. 

இதனால் நடப்பு கணக்கு பற்றாகுறையை சமாளிக்க உலக வங்கியிடம் இருந்து அவ்வப்போது டாலரை கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்