விபத்தில் சிக்கி உயிரிழந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உடலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி

கேரளாவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உடலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி
x
கேரளாவைச் சேர்ந்த பாலபாஸ்கர் என்ற வயலின் இசைக்கலைஞர், தனது அசாத்திய திறமையால், 17 வயதிலேயே, திரைத்துறையில் பிரபலமடைந்தவர். இவர், கடந்த மாதம் 25-ஆம் தேதி, தனது காரில், மனைவி மற்றும் 2 வயது மகளுடன், திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவர்களின் கார் விபத்துக்குள்ளானது. 

2 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பாலபாஸ்கரும், அவரின் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாலபாஸ்கர் உயிரிழந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலபாஸ்கரின் மரணம், ஈடு செய்ய முடியாது என திரைத்துறையினர் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கல்லூரி ஒன்றில் பாலபாஸ்கர் நடத்திய நிகழ்ச்சியின் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்