ஆதார் அடிப்படையில் சிம்கார்டு வழங்குவதை நிறுத்த வேண்டும் : ஆதார் ஆணையம் உத்தரவு

ஆதார் அடிப்படையில் சிம்கார்டு வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கான செயல்திட்டத்தை வரும் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் அடிப்படையில் சிம்கார்டு வழங்குவதை நிறுத்த வேண்டும் : ஆதார் ஆணையம் உத்தரவு
x
ஆதார் எண்ணை தனியார்  மொபைல் நிறுவனங்கள் கேட்க முடியாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை ஆதார் மூலம் மின்னணு கே.ஒய்.சி.  முறையில் பெற்று வந்ததை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் ஆணையம், அனுப்பியுள்ள அறிக்கையில்,தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அக்டோபர் 15ம் தேதிக்குள் ஆதார் அடிப்படையில் கே.ஒய்.சி. விவரங்களை சரிபார்த்து வழங்கும் நடைமுறையில் இருந்து வெளியேறும் செயல் திட்டத்தை வகுத்து, ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்