தூய்மை இந்தியா திட்டம் : தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக தந்தி குழுமம் நடத்திய கருத்துக்கணிப்பில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் : தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு
x
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக தந்தி டிவி, தினத்தந்தி நாளிதழ், மாலைமலர் மற்றும் டிடிநெக்ஸ்ட் இணைந்து தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலும் மும்பையிலும் மாபெரும் கருத்து கணிப்பை நடத்தியது. பொதுமக்கள் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர்கள், பெருநகரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.

தமிழகத்தில் 153 இடங்களில் தந்தி குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்தம் 4 ஆயிரத்து 625 பேர் கழிப்பறைகள் தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

உங்கள் வீட்டில் கழிப்பறை இருக்கிறதா? என்ற கேள்விக்கு 71 சதவீத மக்கள் கழிப்பறை உள்ளது என்றும் 29 சதவீத மக்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு முன்னால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியதாக 70 சதவீதம் பேரும், இல்லை என 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் பகுதியில் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதால் திறந்த வெளியில் காலைக்கடன் கழிப்பது குறைந்துள்ளதாக 62 சதவீதம் பேரும்,  இல்லை என 38 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

பொது கழிப்பறைகள் எல்லாம் முறையாக பராமரிக்கப்படவில்லை என 56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முறையாக பராமரிக்கப்படுகிறது என்று 44 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு பொது கழிப்பிடம் போதுமா? இன்னும் தேவையா என்ற கேள்விக்கு போதுமானதாக உள்ளது  என 43 சதவீதம் பேரும்,  
போதுமானதாக இல்லை என  57 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்றுள்ள மக்கள், அதற்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும்,  ஒவ்வொரு பேருந்து நிலையம் அருகிலும் சுகாதாரமான கழிப்பறையை அமைத்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்