தூய்மை இந்தியா திட்டம் இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு
சுகாதாரத்தை மையப்படுத்தி 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அந்த திட்டம் குறித்த ஒரு தொகுப்பை இப்போது பார்ப்போம்
2014ம் ஆண்டில் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 90 ஆயிரத்து 650 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 6 ஆயிரத்து 890 கழிப்பறைகளும்
அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 495 கழிப்பறைகளும், கோவை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 875 கழிப்பறைகளும் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 550 கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 479 கழிப்பறைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்து ஆயிரத்து 204 கழிப்பறைகளும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 584 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 59 கழிப்பறைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 82 கழிப்பறைகளும், கரூர் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 619 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 765 கழிப்பறைகளும், மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 671 கழிப்பறைகளும் நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 90 கழிப்பறைகளும் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 846 கழிப்பறைகளும், நீலகிரி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 533 கழிப்பறைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 67 ஆயிரத்து 319 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 597 கழிப்பறைகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 946 கழிப்பறைகளும், சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 773 கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 310 கழிப்பறைகளும், தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 258 கழிப்பறைகளும், தேனி மாவட்டத்தில் 51 ஆயிரத்து 342 கழிப்பறைகளும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 425 கழிப்பறைகளும், திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 397 கழிப்பறைகளும், நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 692 கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுளளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 227 கழிப்பறைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 896 கழிப்பறைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 824 கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 725 கழிப்பறைகளும், வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 14 கழிப்பறைகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 899 கழிப்பறைகளும், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 264 கழிப்பறைகளும் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
Next Story