"வட இந்திய நீதிபதிகளிடம் சம்பிரதாயங்களை புரிய வைக்கவில்லை" - மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் புகார்

வட இந்திய நீதிபதிகளிடம், கேரளாவின் சம்பிரதாயங்களை புரிய வைப்பதில், மாநில அரசு தோல்வியடைந்ததாக கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை புகார் தெரிவித்துள்ளார்.
வட இந்திய நீதிபதிகளிடம் சம்பிரதாயங்களை புரிய வைக்கவில்லை - மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் புகார்
x
வட இந்திய நீதிபதிகளிடம், கேரளாவின் சம்பிரதாயங்களை புரிய வைப்பதில், மாநில அரசு தோல்வியடைந்ததாக கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை புகார் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கேரள முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும், சபரிமலையின் மகிமையை தகர்க்க உச்சநீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்தி கொள்ள உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், மாநில அரசை கண்டித்து, வருகிற 3 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்