கண் இமைக்கும் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு...

டெல்லியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு...
x
நேற்று இரவு ,டெல்லி டமூர் நகரில் நடந்து சென்று கொண்டிருந்த ரூபேஷ் என்பவரை நோக்கி வந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அவரை சுட்டுவிட்டு தப்பியோடினர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததை தொடர்ந்து, ரூபேஷ் துடிதுடித்து கீழே விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். தாக்குதலை சமாளிக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் கடுமையாக தாக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்