திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற நாய்...

விழுப்புரத்திலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதை யாத்திரையாக சென்ற பக்தர்களுடன் ஒரு நாயும் உடன் சென்றுள்ளது.
திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற நாய்...
x
விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தலைமையில் 37 பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு நடை பயணமாக கடந்த 23-ம் தேதி புறப்பட்டனர். அவர்கள் புதுச்சேரி மாநிலம்  குச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு நாய் இவர்களை பின் தொடர்ந்தது. அவர்கள் நாயை பலமுறை விரட்டி அனுப்ப முயற்சித்தும் அந்த நாய் அவர்களை பின் தொடர்ந்தது. பின்னர் அவர்கள் நாயையும் தங்களுடனே பாத யாத்திரையாக திருப்பதிக்கு அழைத்து சென்றனர். திருப்பதியில் தரிசனம் செய்த பக்தர்கள், தங்களுடன் 400 கிலோ மீட்டர் நடந்து வந்த அந்த நாயை தங்களது ஊருக்கு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்