மதுக்கடை ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : சில்லறை தராததால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள மதுக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை, வீரேந்திர சிங் ராவத் என்ற பாஜக நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மதுக்கடை ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : சில்லறை தராததால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள்
x
* ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள மதுக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை, வீரேந்திர சிங் ராவத் என்ற பாஜக நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கியுள்ளனர். மதுக்கடைக்கு வந்த வீரேந்திர சிங் ராவத், ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார். ஊழியர்கள் சில்லறை இல்லை என தெரிவிக்க, ஆத்திரமடைந்த வீரேந்திர சிங், தனது ஆதரவாளர்களை அழைத்து, ஊழியர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். 

* இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. படுகாயமடைந்த ஊழியர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வீரேந்திர சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்