மசூதிகளில் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்? - மார்கண்டேய கட்ஜூ கேள்வி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா என முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மசூதிகளில் பெண்களை அனுமதிக்க  தைரியமாக உத்தரவிடுமா  உச்சநீதிமன்றம்? - மார்கண்டேய கட்ஜூ கேள்வி
x
சபரிமலை கோயிலின்  நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருப்பதாகவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என, தீர்ப்பு வழங்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்