குரங்குகளின் படையெடுப்பால் கடும் அவதி - ரூ.184 கோடி விளைபொருள் நாசம்

கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் சுமார் 184 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் குரங்குகளால், சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளின் படையெடுப்பால் கடும் அவதி - ரூ.184 கோடி விளைபொருள் நாசம்
x
இமாச்சலப் பிரதேசத்தில், கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் சுமார் 184 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் குரங்குகளால், சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளப்பெருக்கால் அவதிப்படும் விவசாயிகள், குரங்குகளிடமிருந்து தங்களது பயிர்களைக் காப்பதற்கு, பெரும்பாடு பட்டு வருகின்றனர். குரங்குகளால், சுமார் 75 ஆயிரம் ஹெக்டேர், தரிசாக மாறியுள்ளது... இங்குள்ள குரங்குகள், காடுகளிலிருந்து வெளியேறி நகரங்களில் வாழ தொடங்கிவிட்டன. இங்குள்ள 75 தாலுகா, 34 துணை தாலுகாக்களில், குரங்குகள் வேட்டையாடி இரை உண்ணும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த பட்டியலிலுள்ள விலங்குகளைக் கொல்வதற்கு, அரசு அனுமதியளிக்கிறது. கடந்த 2016, செப்டம்பரில், குரங்குகளை கொல்பவர்களுக்கு, குரங்கொன்றிற்கு தலா 500 ரூபாய் வழங்கப்படுமென்று மாநில வனத்துறை அறிவித்தது. கருத்தடை செய்வதற்கு குரங்கை கொண்டு வந்தால், 700 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.பரிசுத்தொகை அறிவித்தும், குரங்கை கொல்ல யாரும் முன் வரவில்லை. காரணம், ஆஞ்சநேயரின் வடிவமாக, குரங்குகள் பார்க்கப்படுகின்றன.இந்தியாவிலேயே அதிகபட்சமாக இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2007ல், சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் குரங்குகளுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இல்லையென்றால் அவற்றின் எண்ணிக்கை தற்போது, ஆறேழு லட்சங்களை தொட்டிருக்கும். இவை, மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிட்டன. சிம்லா அரசு மருத்துவமனையில், குரங்குகளினால் நோயாளிகள் கடிக்கப்படும் சம்பவம் தினமும் நடைபெறுகிறது. மக்களிடமிருந்து உணவுப் பொருட்களை பறிப்பதும், கடிப்பதும் வழக்கமாகி விட்டன. இந்த குரங்குகள் அரசியல் பகடைக்காயாகவும் பயன் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும், குரங்குகளின் செயல்பாடு பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. ஆனாலும், இதுவரை இந்த விவகாரத்தை, யாரும் சரியாக கையாளவில்லை என்று, குற்றம்சா ட்டப்படுகிறது.இமாச்சலப்பிரதேசத்தில், மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் குரங்குகள் உள்ளன. 33 மனிதர்களுக்கு ஒரு குரங்கு என்ற வீதத்தில் உள்ள அவற்றின் பெருக்கம், அழிவின் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்