காந்தியால் திறந்து வைக்கப்பட்ட பள்ளி மூடல்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட ராஷ்ட்ரிய சாலா என்ற பள்ளி மூடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
காந்தியால் திறந்து வைக்கப்பட்ட பள்ளி மூடல்..!
x
1921-ஆம் ஆண்டில் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பள்ளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பள்ளிக்கான சட்ட திட்டங்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் காந்தியே வகுத்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பள்ளிநிதிப்பற்றாக்குறையால் மூடப்படுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்