இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு

வளர்ச்சித் திட்டங்களுக்காக, இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு
x
* நிலம், நீர் வளங்களை சரியான முறையில் பயன்படுத்த
தேவையான உதவிகளை அளித்து, இந்தியாவில் பொருளாதார 
வளர்ச்சியை அதிகரிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது.

* இதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கி, வறுமையை 
குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

* மனித வள மேம்பாட்டை ஊக்கப்படுத்த, கல்வி, சுகாதாரம்,
தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தவும் உலக வங்கி முடிவு செய்துள்ளது. 

* அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினைகள், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், குழந்தைகள் மேம்பாடு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* இது தொடர்பான வளர்ச்சித் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு  குறைந்த வட்டியில், உலக வங்கி கடன் வழங்க உள்ளது.

* உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. 

* 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், உலக வங்கியிடம் இருந்து 72,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

* 2018 செப்டம்பர் மாத நிலவரப்படி,104 திட்டங்களுக்கு, உலக வங்கியிடம் இருந்து இந்தியா, மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்