ஹிமாச்சலை மிரட்டி வரும் பெரு வெள்ளம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஹிமாச்சலை மிரட்டி வரும் பெரு வெள்ளம்
x
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மண்டி மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக, அங்கு பாயும் பீஸ் ஆற்றில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் கனமழை நீடித்தால், பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக, பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட 21 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள், வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஹிமாச்சலில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் அவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வந்தது.  தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதால் உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்