கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - "மஞ்சள் எச்சரிக்கை"

கேரளாவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.
கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - மஞ்சள் எச்சரிக்கை
x
* கேரளாவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.

* கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கன மழையால், கேரளா வெள்ளம் பெருக்கெடுத்தது. இயற்கை சீற்றத்தில் சிக்கி, எண்ணிலடங்கா சேதங்களை சந்தித்த கேரளா மீண்டும் இயல்பு  நிலைக்கு திரும்பியது.

* சிதிலமடைந்தவற்றை மீண்டும் கட்டமைக்கும் பணியில் கேரள அரசு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் மீண்டும் மழை மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இடுக்கி, பாலக்காடு, திரிசூர்,பத்தனம்திட்டா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 64 மில்லி மீட்டர் முதல் 124 மில்லி மீட்டர் வரை கன மழை பெய்யக்கூடும் என அறிவிப்பட்டுள்ளது. 

* இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகிகளும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்