ரபேல் போர் விமான விவகாரம்: "யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை" - மத்திய அரசு விளக்கம்

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அரசுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.
ரபேல் போர் விமான விவகாரம்: யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை - மத்திய அரசு விளக்கம்
x
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அரசுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில்., இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள டாசால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு விமான உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எந்த நிறுவனத்துக்குப் போர் விமானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுத்ததில் மத்திய அரசுக்கு, எந்தவித பங்கும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் முடிவுக்கே அது விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, கூறியதாக வெளியான செய்திகள், எந்த சூழ்நிலையில் தெரிவிக்கப்பட்டது என கவனமாக பார்க்க வேண்டியுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் டாசால்ட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், இருவேறு தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான வணிக ஏற்பாடு என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 


"ரிலையன்ஸ்-ஐ ஒப்பந்தத்தில் நாங்கள் இணைத்தோம்" - ஃபிரான்சின் டசால்ட் நிறுவனம் விளக்கம்



ரபேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனத்தை, ஒப்பந்தத்தில் தங்களது நிறுவனம் இணைத்ததாக,  டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், இந்த விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக அம்பானியின் ரிலையஸ் நிறுவனத்தையும்  ஒப்பந்தத்தில் இந்தியா சேர்த்துள்ளதாக கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்