இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
x
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டை விட, 2017-இல் 7 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க தேசிய சுற்றுலா துறை அறிவித்திருந்தது.



இதனை, மறுத்துள்ள இந்திய சுற்றுலா அமைச்சகம், அமெரிக்காவில் இருந்து நேரடியாக இந்தியா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து கணிப்பது தவறு என்றும், ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் வழியாக இந்தியா வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.



இந்திய விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை வழியாக வந்த அனைத்து அமெரிக்க சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கையை இந்திய அரசு சேகரித்துள்ளது. அதன்படி, 2016-இல் 12.96 லட்சமாக இருந்த இந்தியா வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 2017-இல் 6 புள்ளி 17 சதவீதம் அதிகரித்து,13.76 லட்சமாக உயர்ந்துள்ளது. 

நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதம் வரை 9.26 லட்சம் அமெரிக்க பயணிகள் இந்தியா வந்துள்ளனர். சென்ற ஆண்டு ஆகஸ்ட் வரையிலான எண்ணிகையுடன் ஒப்பிடுகையில் இது 8.18 சதவீதம் அதிகம். 2010ஆம் ஆண்டில் இருந்து, அமெரிக்க சுற்றுலா பயணிகளின் வருகை, ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது இந்திய சுற்றுலா துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும் என்று கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்