சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் 0 புள்ளி 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு
x
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பானது இனி வரும் காலங்களில் குறைந்துவிடும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்ட தேசிய சேமிப்பு சான்றிதழின்  வட்டி விகிதம் 7 புள்ளி 6 சதவிகிதத்தில் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதமும் 7 புள்ளி 6 சதவிகிதத்தில் இருந்து 8 சவீதமாக உயர்ந்துள்ளது. பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்  வட்டிவிகிதம் 8 புள்ளி 1 இல் இருந்து8 புள்ளி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல், கிசான் விகாஸ் பத்திரத்தின்  வட்டி விகிதம் 7 புள்ளி 3 சதவிகிதத்தில் இருந்து 7 புள்ளி 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, அவற்றின் பத்திரம் நிறைவடையும் காலம் 118 மாதத்தில் இருந்து 112 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்