ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல - மத்திய உள்துறை அமைச்சருக்கு சாந்தன் கடிதம்

ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல என்றும் ராஜீவ் கொலையை தாம் ஆதரிக்கவும் இல்லை என்றும் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல - மத்திய உள்துறை அமைச்சருக்கு சாந்தன் கடிதம்
x
* கடந்த 27 ஆண்டுகளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், தம்மை விடுதலை செய்ய கோரி, மத்திய உள்துறைக்கு அமைச்சருக்கு 4 பக்கத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். 

* அதில், இலங்கை தமிழர்கள், கொழும்பு வழியாக செல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்னை வழியாக பயணிப்பது வழக்கம் என்றும், அப்படித்தான் ஆஸ்திரேலியா செல்லும் நோக்கத்துடன் தாம் தமிழகம் வந்ததாக கூறியுள்ளார். 
 
* அந்த நேரத்தில், தாம் விடுதலை புலிகள் அமைப்பில், உறுப்பினராக இருந்ததாகவும் அப்போது அந்த அமைப்பிற்கு, இந்தியாவில் தடையில்லை என்றும், சாந்தன் விவரித்துள்ளார். 

* 1991 ல் தாம் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றத்தில், சாட்சியம் அளித்தவர் வேறு ஒரு சாந்தனின் புகைப்படத்தை காட்டியதாகவும் அவர் விவரித்துள்ளார். அந்த வழக்கின் தீர்ப்பில், பல குளறுபடிகள் இருப்பதாகவும் சாந்தன் பட்டியலிட்டுள்ளார்.

*  தற்போது, பழையவற்றை புறந்தள்ளி விட தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றில் நேரத்தை செலவிடும் தாம்,  எழுதிய 5 புத்தகங்கள் வெளி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

* வயதான தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தாம் விரும்புவதாகவும் தம்மை உறவுகளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

 * காந்தியை கொன்ற கோட்சே, 16 வது ஆண்டில் விடுதலை செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் காந்தியை கொன்றதை நியாயப்படுத்தி பேசியதாகவும், சாந்தன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

* ராஜீவ்காந்தியை தாம் கொல்லவில்லை என்றும் அந்த கொலையை தாம் ஆதரிக்கவில்லை என்றும் சாந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

*  சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை முடித்து தாம் சிறகடிக்க உதவுங்கள் என்றும் அந்த கடிதத்தில் சாந்தன், உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்