இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எதிர்க்கவில்லை - மோகன் பகவத்

இடஒதுக்கீட்டை, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எதிர்க்கவில்லை என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எதிர்க்கவில்லை - மோகன் பகவத்
x
* டெல்லியில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூன்று நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான நேற்று பேசிய மோகன் பகவத், இட ஒதுக்கீட்டை தாங்கள் என்றென்றும் ஆதரிப்பதாகவும், ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

* தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மோகன் பகவத், அந்த சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

* ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களை சந்தித்து வரும் தாழ்த்தப்பட்டோருக்காக, ஆதிக்கச் சாதியினர் நூறு ஆண்டுகளுக்கு  வளைந்து கொடுப்பது, பிரச்சினை இல்லை என மோகன் பகவத் தெரிவித்தார்.

* ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை, நமது கலாச்சாரத்தின் அடையாளம் என்று தெரிவித்த மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார்.

* ஆர்.எஸ். எஸ் இயக்கத்தில் சேர சிறுபான்மையினர் முன் வர வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்