இந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு?...

இந்தியாவில் எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி மாத வருமானம் எவ்வளவு?...
x
இதற்காக மூவாயிரத்து 145 சட்டமன்ற உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது, ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம். இந்தியாவில், அதிக பணக்கார எம்.எல்.ஏ-க்கள் இருப்பது கர்நாடகாவில் தான் என்கிறது இந்த அறிக்கை. கர்நாடக எம்.எல்.ஏக்கள் சராசரியாக மாதம் 9 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

பணக்கார எம்.எல்.ஏ-க்கள் உள்ள மாநிலங்கள் வரிசையில், தமிழகத்திற்கு 8வது இடம் கிடைத்துள்ளது. தமிழக எம்.எல்.ஏ ஒருவரின் சராசரி மாத வருமானம் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய். இது தவிர, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு தனியாக சம்பளம் வழங்குகிறது. சமீபத்தில், அந்த தொகை 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைவான வருமான உடையவர்கள் சத்தீஸ்கர் எம்.எல்.ஏ-க்கள் தான். அவர்களுக்கு மாதம் 45,000 ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்