வங்கி டெபாசிட் பாதியாக சரிவு - ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய குடும்பங்கள் வங்கிகளில் டெபாசிட்டுகளாக சேமிக்கும் பணத்தின் அளவு பெருமளவு சரிந்திருப்பது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
வங்கி டெபாசிட் பாதியாக சரிவு - ரிசர்வ் வங்கி அறிக்கை
x
2016-17-இல், 9 புள்ளி 4 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் 2017-18-இல் 4 புள்ளி 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இந்திய குடும்பங்களின் மொத்த சேமிப்பில், 40 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கி டெபாசிட்டுகள் 25 சதவீதமாக சரிந்துள்ளது. இதற்கு முன்பு 2009-10ஆம் நிதியாண்டில் தான் வங்கி டெபாசிட்டுகள் 5 லட்சம் கோடிக்கு கீழே இறங்கியிருந்தன.

அதேநேரம், ரொக்கமாக வீட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொகை, மொத்த சேமிப்பில் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய குடும்பங்கள் ரொக்கமாக 4 புள்ளி 7 லட்சம் கோடி இருப்பு வைத்துள்ளனர். 2015-16- இல் இது 2 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

ஐநாறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், 2017இல் அதிரடியாக குறைந்த ரொக்க கையிருப்பு அளவு, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் 3 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாயும், வருங்கால வைப்பு நிதியில் 3 புள்ளி 4 லட்சம் கோடி ரூபாயும் இந்திய குடும்பங்கள் சேமித்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்