ஆந்திர திரை அரங்கில் திடீர் தீ

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கஜூவாகா பகுதியில் உள்ள ஸ்ரீகன்யா திரை அரங்கில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது.
ஆந்திர திரை அரங்கில் திடீர் தீ
x
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கஜூவாகா பகுதியில் உள்ள ஸ்ரீகன்யா திரை அரங்கில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. திரையில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் அதன் மேற்கூரை பற்றி எரிந்தது. திரையரங்கம் முழுவதும் பற்றிய தீயால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.  இதையடுத்து, 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்