தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழுமலையான்..

திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளை முன்னிட்டு ஏழுமலையான் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழுமலையான்..
x
சுவாமி வீதிஉலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரகனக்காண பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி மனம் உருகி கோஷமிட்டனர். இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகளுடன் பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.



ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் - மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்...

முன்னதாக, கல்வ விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மாட வீதியில் வலம் வந்தார். சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு வேத பண்டிதர்கள் வேதம் ஓத, அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி திருமஞ்சன சேவை செய்தனர்.  இதைத்தொடர்ந்து கோவில் ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. இன்று கருடசேவை நடைபெறுவதையொட்டி வெளி நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்