"உள்நாட்டு உற்பத்தியை 10% உயர்த்த வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாக உயர்த்துவதே இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை 10% உயர்த்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில் தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தாவூத் போஹ்ரா சமுதாயத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். மசூதியில் உரையாற்றுவது தமக்கு பெருமையளிப்பதாக கூறிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியர்களின் பண்பு உலகம் முழுதும் பிரதிபலிப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவிகிதமாக இருந்ததாகவும், இதனை 10 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்