50 ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டர்களை பெற்றுள்ளது BHEL நிறுவனம்

50 ஆயிரம் கோடி ஆர்டர்களை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனம் பெற்றுள்ளது.
50 ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டர்களை பெற்றுள்ளது BHEL நிறுவனம்
x
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான (BHEL) எனப்படும் பாரத் ஹெவி எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தளவாட உற்பத்தி செய்ய, ஆர்டர்களை பெற்றுள்ளது. மசகன் டாக்ஸ் லிமிட்டட் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய கடற்படைக்காக ஏழு போர் கப்பல்களை கட்ட இருக்கின்றன. இந்த போர்க் கப்பல்களில், நீண்ட தூரம் தாக்கும் வலிமையுடைய ஏவுகணைகளை செலுத்தும் தளவாடங்களை உருவாக்கி, பொருத்திக் கொடுக்க (BHEL) நிறுவனத்திற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு 9 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஆகும். (BHEL) நிறுவனம் இதுவரை பெற்ற ஆர்டர்களில் இது தான் மிக அதிக மதிப்பு கொண்டதாகும்.
 
ஆகாஷ் ஏவுகணைகளின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளது பெல் நிறுவனம். மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தையும் உருவாக்கியது பெல் நிறுவனம் தான். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ராணுவ தளவாட உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், மேலும் பல ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளது பெல் நிறுவனம். 

Next Story

மேலும் செய்திகள்