10 ஆண்டுகளுக்கு பின்னர் 8.46 டன் தங்கம் வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 டன் தங்கம் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தை வாங்கியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் 8.46 டன் தங்கம் வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி
x
இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 டன் தங்கம் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தை வாங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18 நிதியாண்டில் 8 புள்ளி 46 டன் தங்கம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூபாயின் மதிப்பு சரிவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 566 புள்ளி 23 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டு, இதே தேதியில் 557 புள்ளி 77 டன் தங்கம் கையிருப்பில் இருந்ததாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்