மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிக்கை
பதிவு : செப்டம்பர் 03, 2018, 03:55 PM
நாடு முழுவதும் வங்கிகளில் டெபாசிட் குறைந்து, மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரித்திருப்பது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், 9 புள்ளி 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், இந்த நிதி ஆண்டில் 4 புள்ளி 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதே நிதியாண்டில், மக்களிடம் இருந்த ரொக்க பண கையிருப்பு அளவு, 3 புள்ளி 1 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 4 புள்ளி 7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2016-ல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடம் ரொக்க கையிருப்பு குறைந்து, வங்கிகளில் டெபாசிட் அதிகரித்தது. தற்போது இந்த நிலைமை மாறி, வங்கிகளில் டெபாசிட் குறைந்து,  ரொக்க கையிருப்பு அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, டெபாசிட்டுக்கு குறைந்த வட்டி போன்றவை ரொக்க கையிருப்பு அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வங்கிகளில் டெபாசிட் குறைந்தாலும், மறுபுறம் பங்கு மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

2017-ல் 36 ஆயிரத்து 265 கோடியாக இருந்த இதன் அளவு, 2018-ல் 1 புள்ளி 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, புதிதாக பெறப்பட்ட கடன்  அளவு, 2017-ல் 2 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 2018-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது - இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

91 views

பல்வேறு நாடுகளில் சேவை தரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு

ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15 முடிகிறது.

202 views

பிற செய்திகள்

சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

5 views

தினத்தந்தி இலங்கை பதிப்பு தொடக்கம் - இலங்கை தமிழர்கள் கருத்து பகிர்வு

கொழும்பு நகரில் தினத்தந்தி நாளிதழ் இன்று முதல் வெளியாகியுள்ளது.

9 views

சிதம்பரம் அருகே தண்ணீர் தட்டுப்பாடு - மக்கள் குற்றச்சாட்டு

சிதம்பரம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

5 views

திருவாரூரில் கஜா நிவாரணத் தொகை வழங்கக் கோரி மறியல்

கஜா புயலால் திருவாரூர் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இரு வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

சிப்பெட் ஆண்டு விழா - வெங்கையா நாயுடு பங்கேற்பு

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CIPET) ஐம்பதாவது ஆண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது.

11 views

3-வது நாளாக தொடரும் ஜாக்டோ - ஜியோ போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டம் 3 -வது நாளை எட்டியுள்ளது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.