மத்திய அரசின் அஞ்சல் வங்கி திட்டம் : நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மத்திய அரசின் அஞ்சல் வங்கி திட்டத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
மத்திய அரசின் அஞ்சல் வங்கி திட்டம் : நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
x
கிராமப்புற மக்களும் வங்கி சேவை பெறும் வகையில், நாடு முழுவதும் சுமார் 650 தபால் அலுவலங்களில் இந்த புதிய வங்கி திட்டம் செயல்பட உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, கோவில்பட்டி முதுநிலை கோட்ட அஞ்சல் அதிகாரி பாஸ்கரன்,  முதியோர் உதவித்தொகை,  சமையல் எரிவாயு மானியத்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தொகைகளும் இந்த தபால் வங்கி மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த வங்கியில் புதிதாக கணக்கு துவங்க கைபேசி எண்ணும், ஆதார் கார்டு எண்ணும் இருந்தால் போதும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய முழுவதும் செயல்பட இந்த திட்டத்தை பிரதமர் நாளை துவங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்