திவால் நிலைக்கு தள்ளப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளால் பல மின் உற்பத்தி நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
திவால் நிலைக்கு தள்ளப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்
x
இந்தியாவில், 34 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக்கடன்கள், ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆறு மாதத்திற்குள் கடன்களை வசூல் செய்யாவிட்டால், இந்த நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி கெடு விதித்தது. 

இந்த கெடுவை நீட்டிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், திவால் நிலைக்கு தள்ளப்பட்ட நிறுவனங்களின் மொத்த மின் உற்பத்தி அளவு 40 ஆயிரத்து 130 மெகாவாட் எனவும், போதுமான நிலக்கரி கிடைக்காத நிலை மற்றும் கடும் போட்டியால் குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுபோல, மாநில மின் வாரியங்களிடம் இருந்து வர வேண்டிய நிலுவை தொகை அதிகரித்திருப்பதும், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்றும், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒப்பந்தங்களை ரத்து செய்தது மற்றொரு காரணம் என்றும் கூறப்படுகிறது. 

இதுவரை 8 தனியார் நிறுவனங்களின் வாராக்கடன் பிரச்சனைகள், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்