கேரள வெள்ளம் எதிரொலி - களையிழந்த தோவாளை மலர் சந்தை

கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கைவிடப்பட்டதை அடுத்து தோவாளை பூச்சந்தை களையிழந்து காணப்படுகிறது.
கேரள வெள்ளம் எதிரொலி - களையிழந்த தோவாளை மலர் சந்தை
x
ஓணம் பண்டிகையின் போது இடப்படும் அத்திப்பூ கோலத்திற்காக, இங்கு அதிக அளவில் பூ வியாபாரம் நடைபெறும். இந்த ஆண்டு பண்டிகை கொண்டாட்டம் கைவிடப்பட்டதால், 30 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாததால் அதிக அளவில் பூக்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் வியாபாரம் இல்லாத தோவாளை மலர் சந்தை களை இழந்து காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்