கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர்

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அறிவித்தபடி 600 கோடி ரூபாய் கேரளாவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர்
x
* மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு செய்தித் தொடர்பாளர் சிதான் சுகர் , பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அறிவித்தபடி 600 கோடி ரூபாய் கேரளாவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* இதுதவிர, கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரணப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. மற்றும் ஐ.ஜி.எஸ்.டி.யையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

* கேரள அரசு வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 89 ஆயிரத்து 540 மெட்ரிக் டன் அரிசி, 100 மெட்ரிக் டன் பருப்பும் அனுப்பப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

* இதுதவிர, சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க கேரள மாநிலத்தில் பல இடங்களில் சிறப்பு மையங்கள் தொடங்கி உள்ளதாகவும், அனுமதி பெறாத வாகனங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

* கேரளாவின் அனைத்து தடத்திலும் ரயில் சேவை தொடங்கியுள்ளது என்றும், பல்வேறு மாநிலங்களில் இருந்த நிவாரணப் பொருட்கள் ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

* மின்சார விநியோகத்தை சீரமைக்க செயல் திட்டம் வகுத்து பணிகள் தொடங்கி உள்ளன. 94 சதவீத தொலைபேசி கோபுரங்கள் செயல்படத் தொடங்கி உள்ளது. 

* 4 கோடி குளோரின் மாத்திரைகள் மற்றும், கேரள மக்களுக்கு தேவையான உப்பு, காப்பி, டீத்துள் மற்றும் மசாலா பொருட்களையும் மத்திய அரசு அனுப்பி வருவதாக சிதான் சுகர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்