கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு தொடர்பான குருமூர்த்தியின் கருத்துக்கு மார்கண்டேய கட்ஜுஆதரவு

கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தெவித்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பி உள்ளார்
கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு தொடர்பான குருமூர்த்தியின் கருத்துக்கு மார்கண்டேய கட்ஜுஆதரவு
x
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கை தொடர்புபடுத்தி ஆடிட்டர் குரூமூர்த்தி, அண்மையில் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை  பதிவிட்டு இருந்தார்.அதில்,சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைய வேண்டும் என்று எண்ணியதைக் கண்டு அய்யப்பன் அடைந்த கோபமே,இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

குருமூர்த்தியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆதரவு தெரிவித்துள்ளார்.1934ம் ஆண்டில் பீஹாரில் பூகம்பம் ஏற்பட்டபோது,இது தலித்துகளுக்கு எதிராக செய்த பாவத்திற்காக கிடைத்த தண்டனை என்று மஹாத்மா காந்தி கூறியிருந்தார்.அது போன்றதே குருமூர்த்தியின் கருத்தும் என்று கட்ஜூ தெரிவித்துள்ளார்.இதேபோல 2015ம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது,ராகுல்காந்தி நேபாளம் சென்றதே இதற்கு காரணம் என பாஜகவை சேர்ந்த சாத்வி பிராச்சி கூறியிருந்ததையும் கட்ஜூ சுட்டிக் காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்