தூத்துக்குடியில் இருந்து கொச்சிக்கு 3 கப்பல்கள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

தூத்துக்குடியில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் 3 கப்பல்கள் கொச்சி துறைமுகம் செல்லும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து கொச்சிக்கு 3 கப்பல்கள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
x
சொல்லொணாத துயரங்களை சந்தித்து வரும் கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டுள்ளது. அந்த வகையில், தூத்துக்குடியில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் 3 கப்பல்கள் கொச்சி துறைமுகம் செல்லும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், S .S.L BHARATH என்ற கப்பல் வருகிற 23 ம் தேதி புறப்படும் என கூறியுள்ளார். இதேபோல, LALBAHADUR SHASTRI என்ற கப்பல் 30 ம் தேதியும், S.S.L DELHI என்ற மற்றொரு கப்பல் செப்டம்பர் 6 ம் தேதியும் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் என நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இதனிடையே, கேரளாவுக்கு விமானப்படையின் 90 விமானங்களும், 500 விசைப்படகுகளும் அனுப்ப, தேசிய பேரிடர் மீட்பு குழு முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்