பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு: ஐயப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் - கோயில் நிர்வாகம்

பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஐயப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு: ஐயப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் - கோயில் நிர்வாகம்
x
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். கேரளாவில் கடந்த 5 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பம்பையில் உள்ள பக்தர்கள் நடைபாதை, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பம்பை அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் தண்ணீர் புகுந்தது. 

இந்நிலையில் ஆண்டுதோறும் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை  செவ்வாயன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு  நிறைபுத்தரிசி பூஜை வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பூஜை நடத்தினால் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் யாரும் நிறைபுத்திரி பூஜைக்கு வரவேண்டாம் என ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் கோரிக்கை வைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்