குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் ஏன் அமைக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 11, 2018, 10:32 AM
குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி அமைச்சகத்தை ஏன் அமைக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் தண்டனை வழங்குவதுடன், ஆண்மைப் பறிப்பு தண்டனையும் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. போக்சோ சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த கிரிஜா ராகவன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை பிரித்து, குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி துறையை அமைப்பதற்கான நேரம் வந்து விட்டதாகக் கூறினார்.  

இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க மத்திய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நிர்பயா நிதியத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2810 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1644 views

பிற செய்திகள்

இந்தியாவின் முதல் அதிநவீன சொகுசுக் கப்பல் 'அங்ரியா'

நாளை மறுநாள் பயணத்தை தொடங்குகிறது

259 views

ஒலி மாசை கட்டுப்படுத்த புதிய முயற்சி

"காதுகளில் headphones மாட்டிக் கொண்டு நடனம்"

28 views

திருப்பதி ஏழுமலையான் கோயில் : பாயும் தங்க குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக, கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

17 views

ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், சுஹாசினி ராஜ் என்ற பெண் பத்திரிக்கையாளர் செல்ல முயன்றார்.

195 views

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு தேசிய விருது

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்

38 views

பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் நடை திறப்பு

பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

305 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.