"விமான நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை" - மத்திய அமைச்சர் அறிக்கை
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 06:28 PM
மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார்.
சமீபத்தில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து அதிமுக உறுப்பினர் அர்ஜூனன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில் பெங்களூருவில் இருந்து கொச்சி வரை சென்ற விமானமும், கோவையில் இருந்து ஹைதராபாத் வரை சென்ற விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டு பின்னர் அது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சர்வதேச விமானங்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதாகவும், அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில் விமானங்களை எந்த நேரத்தில் இயக்குவது என்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. கூட்ட நெரிசல் நேரம் உள்ள நேரங்களில் இயக்கப்படும் விமானங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

15 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

14 views

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

82 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

58 views

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு : பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி

மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.