Z + பாதுகாப்பு என்றால் என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருந்த Z பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், Z பிளஸ் பாதுகாப்பின் சிறப்பம்சங்கள் என்ன...?
Z + பாதுகாப்பு என்றால் என்ன?
x
திமுக தலைவர் கருணாநிதி மறைவு எதிரொலி - அவருக்கு அளிக்கப்பட்ட "Z +"  பாதுகாப்பு வாபஸ்

தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசின் உள்துறை சார்பில் இசட், இசட் பிளஸ், ஒய், எக்ஸ் ஆகிய பிரிவுகளில் பாதுகாப்பு  வழங்கப்படுகிறது. இந்திய அளவில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 24 பேருக்கு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், இரண்டு பாதுகாப்பு வாகனம் மற்றும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் மொத்தம் 24 பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்,கருணாநிதி மறைந்ததை அடுத்து, நேற்றுடன் அவருக்கு வழங்கப்பட்டிருந்த "இசட்" பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

Z + பாதுகாப்பு என்றால் என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருந்த Z பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், Z பிளஸ் பாதுகாப்பின் சிறப்பம்சங்கள் என்ன...?



Next Story

மேலும் செய்திகள்