காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ பிரிவுக்கு எதிரான வழக்கு : ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ பிரிவுக்கு எதிரான வழக்கு : ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு
x
வெளி மாநில மக்கள் காஷ்மீரில் சொத்து வாங்குவதற்கு தடை, பிற மாநிலத்தவர்களை திருமணம் செய்யும் காஷ்மீர் மாநில பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு ஆகியவற்றை சட்டப்பிரிவு 35 ஏ, உறுதி செய்கிறது. இதனை எதிர்த்து, டெல்லியை சேர்ந்த அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அன்று வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்