மாணவர்கள் தற்கொலையில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடம்...
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 02:48 PM
நாடு முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர் தற்கொலை - தமிழகம் முதலிடம் சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக, அறிக்கை வெளியாகி உள்ளது. பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம், மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றிய ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், சமூக மூலதனம், காவல் துறை செயல்பாடு, வன்கொடுமை தடுப்பு, கடும் குற்றங்கள் குறைப்பு, குழந்தைகள் நலன் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வசதிகள், நீதி வழங்கல், வனப்பரப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பு, கழிவு மேலாண்மை, நிலையான வேளாண்மை மற்றும் நீர் ஆதார மேலாண்மை,, மருத்துவ வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு ஆகிய துறைகளில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு,  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஸ்வாகா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதில், கடந்த 2015ஆம் ஆண்டு, தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக,  தமிழகத்தில் 955 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக குறிப்பிட்டார். 
ஆந்திராவில் 360 மாணவர்களும், கேரளாவில் 374 பேரும், தெலங்கானாவில் 491 பேரும், கர்நாடகாவில் 597 பேரும் மற்றும் புதுச்சேரியில் 17 பேரும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவில் அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 230 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகக் தெரிவித்தார். தற்கொலை செய்தவர்களில், 18 வயதிற்கு குறைவானவர்கள் ஆயிரத்து 360 பேரும், 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆயிரத்து 183 பேரும் உள்ளதாகவும் அவர் கூறினார். தற்கொலைக்கு தேர்வில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் விவகாரம்- இளம்பெண் தற்கொலை முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் விவகாரத்தால், இளம்பெண் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

15 views

3 பெண் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய வாசலில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

488 views

திமுக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

64 views

நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

8 ஆண்டுகளாக நிலுவை தொகை வழங்காததால் நகராட்சி ஆணையர் முன் விஷம் அருந்தி படுத்து கொண்டார்.

415 views

குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4751 views

பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்திய பிரதேசத்தில், பையூஜி மகாராஜ் என்ற பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

287 views

பிற செய்திகள்

4வது கணவருடன் சென்ற பெண் - வடிவேலு நகைச்சுவையை நினைவுபடுத்தும் சம்பவம்

பெங்களூருவில் மனைவிக்காக அவரது 2 கணவர்கள் சாலையில் சண்டையிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

11329 views

கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது?

10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2479 views

மொபைல் போன்களில் ஆதார் உதவி எண் -தகவல்கள் திருடப்படாது என விளக்கம்

செல்போன்களில் உள்ள ஆதார் உதவி எண் மூலம், தகவல்கள் எதுவும் திருடப்படாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

13 views

உள்ளாட்சி தேர்தல் - மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்...

வார்டு மறுவரையறை தொடர்பான அறிக்கை ஆக. 31ம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தகவல்

157 views

கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?

தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

101 views

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? - இன்றுடன் கெடு முடிவதால் தேர்தல் ஆணையம் தீவிரம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

268 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.