13 வயதில் இளம் தொழில் முனைவோர் - 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்த சிறுவன்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 09:26 AM
இளம் தொழில் முனைவோராகி, 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்து, சாதனை புரிந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த திலக் மேத்தா (Tilak Mehta) எனும் 13 வயதுச் சிறுவன், இப்போது ஓர் இளம் தொழிலதிபராக, வலம்வருகிறார்..இவரது, ''Papers N Parcels'' என்ற PNP நிறுவனம் மும்பை நகருக்குள் அனுப்பும் கடிதங்களையும், சிறு பண்டல்களையும், சில மணி நேரத்திற்குள்ளாக கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி, சுவாரஸ்யமானது. திலக் ஒரு முறை தமது பாடப் புத்தகங்களை, உறவினர் வீட்டில் மறந்து, வைத்துவிட்டார். அதைத் திரும்பப்பெற, வேலையிலிருந்து மிகவும் தாமதமாகவும், களைத்துப் போயும் வந்திருந்த, தமது தந்தையை, மீண்டும் அலைய வைக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவமே,  கடிதங்கள் மற்றும் சிறு பண்டல்களை அனுப்பவும், பெறவுமான சேவைகளை ஆரம்பிக்க உந்துதலாக இருந்துள்ளது. 
மும்பையில், மதிய உணவை கொண்டு செல்வதற்கு டப்பாவாலாக்கள் எனப்படும் குழுவினர் ஏற்கெனவே இயங்கி வருகின்றனர். அவர்களின் வலை தொடர்பையே இந்தப் புதிய சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள திலக் முடிவு செய்தார். நான்கு மாதங்களுக்கு மேல் சோதனை முயற்சியாக இந்த சேவையை நடத்திப் பார்த்து, அதன் வெற்றியை உறுதி செய்து கொண்ட பின்னர், இப்போது இவரது நிறுவனம், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

"Papers N Parcels" என்பது, அடிப்படையில், டிஜிட்டல் கூரியர் சேவையாகும். உங்கள் பண்டலை தரலாம் அல்லது எங்களது செயலி மூலம், பதிவு செய்யலாம். எங்களது பணியாளர், உங்கள் வீட்டிற்கு வருவார் அல்லது நீங்கள் கூறிய இடத்தில் இருந்து, பண்டலை பெற்று வருவார். உங்களால், வாங்கவும், விநியோகிக்கவும், முடியும். ஒரே நாளில் எங்களது பணியை நிறைவு செய்கிறோம். இந்த வசதிகள், உரிய விலையில் கிடைக்கின்றன.ஸ்மார்ட் போனில் இந்த சேவைக்கென தனி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்களின் ஒத்துழைப்போடு, தமக்கென 200 தொழிலாளர்களையும் கொண்டுள்ள, திலக்-ன் இந்த நிறுவனம் நாளொன்றுக்கு ஆயிரத்து 200 கடிதங்கள் மற்றும் பண்டல்களை விநியோகம் செய்து வருகிறது. மும்பையில் ரயில் வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் மட்டுமே, தற்போது இந்த சேவை வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண்

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15315 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

992 views

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

252 views

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

487 views

பிற செய்திகள்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை" - பினராயி விஜயன்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

3 views

வெங்காயத்துக்கு விலை இல்லாததால் சாலையில் வீசிய விவசாயிகள்

மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விற்பனை விலை, வெகுவாக குறைந்துள்ளது.

21 views

பனிப்போர்வையால் போர்த்தப்பட்டுள்ள காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதர்வா பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

16 views

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

22 views

ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை

அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

33 views

நாடாளுமன்ற தாக்குதல் நினைவுதினம் : உயிர்நீத்த வீரர்கள் படத்திற்கு தலைவர்கள் அஞ்சலி

நாடாளுமன்றத்தின் மீது தாக்‍குதல் நடத்தியதன் 17-வது நினைவு தினத்தையொட்டி, உயிர் நீத்த வீரர்கள் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.