ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 02:03 PM
சட்ட விரோதமாக எரிவாயுவை எடுத்தது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள கே.ஜி. 6 என்ற பெட்ரோலிய வயல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்து உள்ள பகுதி மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி-க்கு ஒதுக்கபட்டுள்ளது. ஒ.என்.ஜி.சி. நிறுவன எண்ணை வயல்களில் இருந்து எரிவாயு, கடலின் அடிப்பகுதி வழியாக ரிலையன்ஸ் நிறுவன எண்ணை வயல்களுக்கு கசிந்ததால், அந்த நிறுவனம் பெரும் லாபம் அடைந்ததாக, 2016 -ல் ஏ.பி.ஷா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்த அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 10 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு சிங்கப்பூரில் அமைக்கபட்ட சர்வதேச தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. சிங்கபூர் பல்கலை கழக பேராசிரியர் Lawrence Boo, இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் இங்கிலாந்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பெர்னார்ட் எடர் ஆகியோர் அடங்கிய  அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழக்கு  செலவாக 56 கோடியே 44 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் ஒரு மணி நேர வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?

4970 views

பிற செய்திகள்

"கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - ராகுல் காந்தி கோரிக்கை

கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

33 views

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி - பிரதமர் மோடி

கேரள வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.

23 views

கனமழை,வெள்ளத்தால் தொடரும் சோகம் - பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மழை,வெள்ளத்திற்கு 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

94 views

கர்நாடகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை : கயிறு கட்டி மக்களை மீட்ட பேரிடர் குழு

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது.

208 views

கேரளா வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர்

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

117 views

ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு..

கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளநீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கி இருந்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.