நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறை தேவை - தேர்தல் ஆணையத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலி​ல் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த,எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன​.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறை தேவை - தேர்தல் ஆணையத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டம்
x
நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவிற்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான  மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இதற்காக காங்கிரஸ், தெலுங்குதேசம், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். 

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும், நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குசீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இதற்காக காங்கிரஸ், திரிணாமுல்,சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 17 கட்சிகளின்  தலைவர்கள் விரைவில் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்ந்த நாடுகள் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி வருவதாகவும், தேர்தலின்போது ஒரு கட்சிக்கு ஆதரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்