உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது - தினத்தந்தி கள ஆய்வில் தகவல்...

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகளிடம் 'தினத்தந்தி' நடத்திய கருத்துக் கணிப்பில், உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது - தினத்தந்தி கள ஆய்வில் தகவல்...
x
2018-19ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச தார விலையை 14 சம்பா பயிர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 150 விவசாயிகளிடம் தினத்தந்தி நாளிதழ் கருத்துக் கேட்டது. இந்த கள ஆய்வில், மத்திய அரசு அறிவித்துள்ள விலையை மேலும் உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். 

* உதாரணமாக, ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ. 1000 முதல் 2000 வரை செலவு ஆகிறது என கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செலவினங்கள் மாறுபடுகின்றன. 

* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3000 கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி விலை நிர்ணயித்தால், 1 குவிண்டாலுக்கு 2340 ரூபாய் கிடைக்கும். தற்போது மத்திய அரசோ 1750 ரூபாய் என அறிவித்துள்ளது. ஆனால் வெளிமார்க்கெட்டில் அதைவிட குறைவாக, குவிண்டாலுக்கு 1300 ரூபாய் தான் கிடைக்கிறது என்பதையும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

* 14 சம்பா பயிர்களில், 12 பயிர்களுக்கு தற்போது அரசு நிர்ணயித்துள்ள விலை, வெளிமார்க்கெட்டை விட அதிகம் தான் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் தங்கள் செலவினங்களை சமாளிக்க மேலும் உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர். தாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்றாலும், எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் ஃபார்முலாவை பின்பற்றினால் வரவேற்பிற்குரியது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

* அதே போல, இடைத்தரகர்களின் தலையீடை குறைக்கும் வகையில், கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை மத்திய-மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கை என, தினத்தந்தி நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.




Next Story

மேலும் செய்திகள்