தொழிலதிபர்கள் பக்கத்தில் நிற்க பயமில்லை - பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில்,பேசிய அவர், விவசாயிகள், வங்கியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்களைப் போல் நாட்டின் வளர்ச்சியில் தொழிலதிபர்களும் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
தொழிலதிபர்கள் பக்கத்தில் நிற்க பயமில்லை - பிரதமர் மோடி
x
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில், 60 ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பிலான 81 முதலீட்டு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகள், வங்கியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்களைப் போல் நாட்டின் வளர்ச்சியில் தொழிலதிபர்களும் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தனது மனசாட்சி தெளிவாக இருப்பதால், தொழிலதிபர்களுடன் அருகில் நிற்பதாகவும், அதற்காக தான் பயப்படவில்லை என்றும் மோடி கூறினார். தொழிலதிபர்களை சிலர் வெளிப்படையாக சந்திக்க மாட்டார்கள்,  ஆனால், மறைமுகமாக சந்திப்பார்கள் என்று குறிப்பிட்ட மோடி, அதற்கு அவர்கள்தான் அச்சப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

பிரதமர் மோடி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், விவசாயிகளின் நலனை புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி இவ்வாறு பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்