4 ஆண்டுகள் ரயிலில் பயணித்த 1,316 உரமூட்டைகள்

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கோரக்பூருக்கு 1,316 உர மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டது.
4 ஆண்டுகள்  ரயிலில்  பயணித்த 1,316 உரமூட்டைகள்
x
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கோரக்பூருக்கு ஆயிரத்து 316 உர மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டது. இந்த உரம் கடந்த புதன்கிழமை  கோரக்பூர் வந்தடைந்தது. 
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி நகரை சேர்ந்த ராமசந்திரா குப்தா என்ற வணிகர் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பொட்டாஷ் நிறுவனத்தில் ஆயிரத்து 316 மூட்டை உரம் கொள்முதல் செய்துள்ளார். ஆயிரத்து 326 கிலோ
 மீட்டர் தொலைவை 42 மணி நேரம் 13 நிமிடங்களில் கடக்க வேண்டிய நிலையில், கிட்டதட்ட 4 ஆண்டுகள் பயணித்து அந்த உரமூட்டைகள் கோரக்பூரை கடந்த புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு அடைந்துள்ளன.  உர மூட்டைகளுடன் சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக தவறுதலாக அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் அதனால் தாமதம் ஏற்பட்டு இருக்கும் 
எனவும்  ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்