"பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்" : 9000 பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்

பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க, ஹைதராபாத் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம் : 9000 பிச்சைக்காரர்களுக்கு  மறுவாழ்வளிக்கும் திட்டம்
x
ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என, வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள், இந்தியாவில் சுமாராக, 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.பிச்சை எடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி, இதையே இவர்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் 9 ஆயிரம் பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வளிக்கும் முயற்சியில், காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்தாண்டு, நவம்பர் மாதம், ''பிச்சைக்காரர்கள் இல்லாத ஹைதராபாத்'' என்ற திட்டத்தை, காவல்துறையினர் தொடங்கினர். இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, 300 பிச்சைக்காரர்கள், மறு வாழ்வளிக்கும் காப்பகத்தில், தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


இந்த காப்பகத்தில், சுகாதாரமான உணவு, அடிப்படை வசதிகளோடு, கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. படிப்பறிவு இல்லாதது, வேலை வாய்ப்புக்கு வாய்ப்பில்லாத காரணத்தால், பலரையும் இந்த நிலைக்கு தள்ளி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன... 

மேலும், அவர்களை மகிழ்விக்க, இசை, நடனம் என, பொழுது போக்கு அம்சங்களும் இந்த காப்பகத்தில் உள்ளது.''பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்'' என்ற இலக்கின் ஒரு கட்டமாக, காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளையும், ஹைதராபாத் நகர காவல்துறையினர், தீவிரப்படுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்