"ஆண்டுக்கு இருமுறை ஜே.இ.இ.,நீட் தேர்வுகள்" : மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தகவல்

நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக, மையங்கள் அமைத்து, கணினி மூலம் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு இருமுறை ஜே.இ.இ.,நீட் தேர்வுகள் : மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தகவல்
x
நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் சத்யபால்சிங் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். ஜே.இ.இ,  மற்றும் நீட் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை தேசிய திறனாய்வு முகமையால் நடத்தப்படும் என அவர் தமது பதிலில், கூறியுள்ளார். அனைத்து நுழைவு தேர்வுகளும், கணினியை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் என்றும், இதற்காக கணினி மையங்கள் கொண்ட பள்ளி, கல்லூரியை தேர்வு செய்து கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்