கர்நாடகத்தில் அந்நிய முதலீடு அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டில், கர்நாடக மாநிலத்தில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகளின் அளவு, 300 சதவீதம் உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் அந்நிய முதலீடு அதிகரிப்பு
x
இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது. அதன்படி, 2016 மற்றும் 2017-ஆம் நிதியாண்டில், கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்த அந்நிய முதலீடு 14 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2017 - 2018 நிதியாண்டில் அது 300 சதவீதம் உயர்ந்து  59 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழகத்தில் அந்நிய முதலீடு மதிப்பு, 2016-17-ஆம் நிதியாண்டில், 15 ஆயிரத்து 350 கோடி ரூபாயாக  இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 56 சதவீதம் உயர்ந்து 24 ஆயிரம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அந்நிய முதலீடுகள், முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளன.

ஒட்டு மொத்தமாக கணினி மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் துறைகளில், அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 68 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல, வங்கி சேவை, காப்பீடு உள்ளிட்ட துறைகளில், அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு சரிவடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்